இளைஞர்களின் கனவு எப்படி நனவாகும் - பா.ம.க.... ... 01-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2025-01-01 10:11:45.0
t-max-icont-min-icon

இளைஞர்களின் கனவு எப்படி நனவாகும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டு உள்ள செய்தியில், தமிழகத்தில் 2024-ம் ஆண்டில் 10,701 பேருக்கு அரசு பணி வழங்கி உள்ளது என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. ஆண்டிற்கு 10 ஆயிரம் பேருக்கு மட்டும் வேலை வாய்ப்பு வழங்கினால் இளைஞர்களின் கனவு எப்படி நனவாகும்?

வேலை வாய்ப்பு கோரி 60 லட்சம் பேர் காத்திருக்கும் நிலை உள்ளது. இந்த நிலையில், அதிக காலி பணியிடங்களை வைத்திருப்பது என்பது அரசின் அலட்சியமே காரணம். காலியாக உள்ள 6.25 லட்சம் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story