பரபரப்பின் உச்சத்தில் பாக்சிங் டே டெஸ்ட்.. கடைசி... ... 29-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2024-12-29 07:27:19.0
t-max-icont-min-icon

பரபரப்பின் உச்சத்தில் பாக்சிங் டே டெஸ்ட்.. கடைசி விக்கெட்டை வீழ்த்த தடுமாறும் இந்தியா

4-வது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் அடித்துள்ளது. நாதன் லயன் 41 ரன்களுடனும், ஸ்காட் போலந்து 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளும், சிராஜ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா இதுவரை 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை கடைசி நாள் ஆட்டம் என்பதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

1 More update

Next Story