தினத்தந்தி பத்திரிகை நிறுவனர், தமிழர் தந்தை... ... 118-வது பிறந்தநாள்  சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர்கள்- தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை
x
Daily Thanthi 2022-09-27 04:23:06.0
t-max-icont-min-icon

'தினத்தந்தி' பத்திரிகை நிறுவனர், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 118வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் அவரது சிலைக்கு கீழே உள்ள உருவ படத்திற்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன், அனிதா ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். மேலும், 'தினத்தந்தி' குழும தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இவர்களை தவிர, பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சி.பா.ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

1 More update

Next Story