இந்திய அணியை சரிவில் இருந்து மீட்கும் ரஹானே , ஜடேஜா


இந்திய அணியை சரிவில் இருந்து மீட்கும் ரஹானே , ஜடேஜா
x
Daily Thanthi 2023-06-08 15:59:45.0
t-max-icont-min-icon

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். 71 ரன்களுக்குள் இந்திய அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அப்போது 5-வது விக்கெட்டுக்கு ரகானேவுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்க போராடி வருகிறது. ஒருபக்கம் ரகானே நிதானமாக விளையாட ஜடேஜா அதிரடி காட்டி வருகிறார்.

32 ஓவர்கள் நிலவரப்படி ஜடேஜா 35  ரன்களுடனும் , ரகானே 23 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 32 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 349 ரன்கள் பின் தங்கியுள்ளது.

1 More update

Next Story