நாளை பட்ஜெட் கூட்டத் தொடர்: இன்று அனைத்துக்கட்சி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-01-2025
x
Daily Thanthi 2025-01-30 04:04:21.0
t-max-icont-min-icon

நாளை பட்ஜெட் கூட்டத் தொடர்: இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்த கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகார துறை மந்திரி கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்துள்ளார். இதில், நடப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ள மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக நாடாளுமன்றம் சுமுகமாக செயல்பட எதிர்க்கட்சிகள் அனுமதித்தால் அனைத்து விவகாரங்கள் குறித்து எளிதாக விவாதிக்க முடியும் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


1 More update

Next Story