
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1,000 கோடியில் பாதாள சாக்கடை பணிகள் - அமைச்சர் கே.என்.நேரு தகவல்
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி, மறைமலைநகர் நின்னக்கரை ஏரியை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பினார்,
மேலும், சென்னை மாநகர் பகுதி தவிர்த்து சென்னை புறநகர் பகுதிகளில் 3,898 நீர் நிலைகள் உள்ளன. இதில் தாம்பரம் பகுதிகளில் ரூ.211 கோடி செலவில் தற்போது பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விடுபட்ட பகுதிகளில் ரூ.780 கோடி செலவில் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதைத் தவிர்த்து செங்கல்பட்டு பகுதியில், ரூ.76.26 கோடி, மதுராந்தகம் பகுதியில் ரூ.9.50 கோடி, மறைமலை நகர் பகுதிகளில் ரூ.300.57 கோடியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகள் எல்லாம் முடிந்த பிறகு சுத்திகரிக்கப்பட்ட நீர் மட்டுமே நீர் நிலைகளுக்கு செல்லும். எனவே நீர் நிலைகள் மாசுபடுவது தடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.






