வயநாடு நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 333 ஆக உயர்வு  ... ... வயநாடு நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 333 ஆக உயர்வு
Daily Thanthi 2024-08-02 12:30:40.0
t-max-icont-min-icon

வயநாடு நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 333 ஆக உயர்வு

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 333 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 281 பேர் மாயமானதாக கூறப்படும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்திய ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை, கடற்படையினர், வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட கருவிகள் மூலம் காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

தெர்மல் ஸ்கேனர் கருவியை கொண்டு தேடும்போது, இடிபாடுகளுக்கிடையே சிலர் இன்னும் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

1 More update

Next Story