
கொனார்க் சக்கர பின்னணியில் தலைவர்களை வரவேற்றார் மோடி
‘ஜி-20’ மாநாடு நேற்று கோலாகலமாக தொடங்கியது.
இந்த மாநாட்டுக்காக டெல்லி பாரத் மண்டபத்துக்கு வந்த பல்வேறு நாடுகளின் தலைவர்களை மேடையில் பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார்.
அந்த மேடையில் பின்னணியில், பிரசித்தி பெற்ற ஒடிசா சூரியக் கோவிலின் கொனார்க் சக்கரத்தின் படம் பிரமாண்டமாக இடம்பெற்றிருந்தது. அதன் ஒருபுறம் ஜி-20 இலச்சினையும், மற்றொருபுறம் இந்த மாநாட்டின் கருப்பொருளான ‘வசுதைவ குடும்பகம்’ -ஒரு உலகம். ஒரு குடும்பம். ஒரு எதிர்காலம்’ என்ற வாசகங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.
‘ஜி-20’ நாடுகள், அழைப்பு நாடுகள் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகளின் கொடிகளில் காற்றில் மெதுவாக ஆட, மெல்லிய ஷெனாய் இசை பின்னணியில் ஒலிக்க, வரவேற்பு நிகழ்வு நடந்தது.
கொனார்க் சக்கரத்தின் சிறப்பு குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி விளக்கி கூறியது குறிப்பிடத்தக்கது.






