மறு உத்தரவு வரும் வரை பாதுகாப்பான இடங்களை விட்டு... ... இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 9ம் நாளாக தொடரும் போர்..!!
Daily Thanthi 2023-10-15 12:05:21.0

மறு உத்தரவு வரும் வரை பாதுகாப்பான இடங்களை விட்டு வெளியே வர வேண்டாம் என இஸ்ரேல் மக்களுக்கு அந்நாட்டு ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹமாஸ் படையினர் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இந்த எச்சரிக்கை ராணுவம் தரப்பில் இருந்து மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

டெல் அவிவ், ஸ்டீரோட், அஸ்- ஹலான் உள்ளிட்ட நகரங்களில் மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக சைரனும் ஒலித்தது. இதனால் இஸ்ரேலின் வடக்கு பகுதியில் வசிக்கும் மக்கள் மத்தியில் கூடுதல் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


Next Story