உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாத... ... #லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனில் பிரான்ஸ் பத்திரிகையாளர் குண்டுவீச்சில் பலி - விசாரணைக்கு அழைப்பு
Daily Thanthi 2022-05-31 10:49:51.0

உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த போர் மூன்று மாதங்கள் கடந்தும் இன்னும் நின்றபாடில்லை. உக்ரைனில் பல நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. பல இடங்களில் பொதுமக்கள் குடியிருப்புகள் மீது ரஷிய படைகள் ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது.

இதனிடையே, போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக 2 ரஷிய ராணுவ வீரர்கள் மீது உக்ரைன் குற்றம் சுமத்தி வழக்கு விசாரணை நடத்தியது. உக்ரைன் நீதிமன்றத்தில் விசாரணை நடந்த நிலையில் இருவருக்கும் தலா 11 1/2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உக்ரைன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story