இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான நட்பு... ... இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான நட்பு நீண்டகாலம் நீடிக்க வேண்டும் - பிரதமர் மோடி
Daily Thanthi 2024-02-13 15:31:31.0
t-max-icont-min-icon

இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான நட்பு நீண்டகாலம் நீடிக்க வேண்டும் 

ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி அபுதாபியில் ‘அஹ்லன்’ மோடி என்ற தலைப்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார். ஐக்கிய அரபு அமீரகம் வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, அபுதாபியில் இன்று நீங்கள் வரலாற்றை உருவாக்கியுள்ளீர்கள். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். ஆனால், ஒவ்வொருவரின் இதயமும் ஒன்றிணைந்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க அரங்கில் ஒவ்வொருவரின் இதய துடிப்பும், மூச்சும், ஒவ்வொருவரின் வார்த்தையும் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான நட்பு நீண்டகாலம் நீடிக்க வேண்டும் என கூறுகிறது’ என்றார்.

1 More update

Next Story