உக்ரைனில் ஒவ்வொரு நாளும் இரண்டுக்கும் மேற்பட்ட... ... #லைவ் அப்டேட்ஸ்: ஆயுதங்கள், வெடிபொருட்களுடன் உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா
Daily Thanthi 2022-06-05 00:31:45.0
t-max-icont-min-icon


உக்ரைனில் ஒவ்வொரு நாளும் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாவதுடன், நான்கு பேர் காயமடைகின்றனர் - ஐ.நா தகவல்

இதுதொடர்பாக உக்ரைனில் உள்ள யுனிசெஃப் பிரதிநிதி முராத் சாகின் கூறுகையில், ஒவ்வொரு நாளும் சராசரியாக இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் போரினால் கொல்லப்படுகின்றனர் மற்றும் நான்குக்கும் மேற்பட்டோர் காயமடைந்து வருகின்றனர்.

மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெடிகுண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதில் பெரும்பாலானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த புள்ளிவிவரங்கள் ஐ.நாவால் சரிபார்க்க முடிந்த சம்பவங்களை மட்டுமே குறிக்கின்றன, மேலும் உண்மையான புள்ளிவிவரங்கள் மிக அதிகமாக இருப்பதாக தான் நம்புவதாக சாகின் கூறினார்

1 More update

Next Story