ஜனநாயகன் - பராசக்தி: பொங்கல் ரேசில்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 02.01.2026
x
Daily Thanthi 2026-01-02 05:21:55.0
t-max-icont-min-icon

'ஜனநாயகன்' - 'பராசக்தி': பொங்கல் ரேசில் முந்தப்போவது யார்?

2026 புத்தாண்டில் வரும் முதல் பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு இந்த ஆண்டு விஜய் நடிப்பில் 'ஜனநாயகன்', சிவகார்த்திகேயன் நடிப்பில் 'பராசக்தி' ஆகிய படங்கள் களத்தில் உள்ளன.

அரசியலில் நுழைந்துள்ள நடிகர் விஜய்க்கு 'ஜனநாயகன்' கடைசி படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. 'பராசக்தி' படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோ என்றாலும், ஜெயம் ரவி, அதர்வாவும் இருப்பதால் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. 1965-ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்பான கதை என்பதால், 'வின்டேஜ்' ரசிகர்களுக்கு இது விருந்தாக அமையும் என்று கூறப்படுகிறது.

'ஜனநாயகன்', 'பராசக்தி' இரண்டில் யார் முந்துவது? என்று பார்த்தால், இளைய தளபதிக்கே ரசிகர்கள் மத்தியில் வேகம் இருப்பது தெரிகிறது.   

1 More update

Next Story