பீகாரில் சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து  பீகார்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 28-12-2025
x
Daily Thanthi 2025-12-28 06:40:27.0
t-max-icont-min-icon

பீகாரில் சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் நேற்று நேற்று இரவு 11.25 மணியளவில் கிழக்கு ரெயில்வேயின் ஆசன்சோல் கோட்டத்திற்கு உட்பட்ட லஹாபோன் மற்றும் முல்தலா ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.

சரக்கு ரெயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டன. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்து காரணமாக ஹவுரா-பாட்னா-டெல்லி வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

1 More update

Next Story