புதிய கட்சியை தொடங்கினார்  பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-07-2025
x
Daily Thanthi 2025-07-05 07:28:00.0
t-max-icont-min-icon

புதிய கட்சியை தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5-ந் தேதி சென்னையில் அவரது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இதுவரை 27 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் அவரின் நினைவிடம் அமைந்துள்ள சென்னையை அடுத்த பொத்தூரில் அவருக்கு முழு உருவ சிலை வைக்க காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிலை வைக்க அனுமதி அளிப்பதாக தமிழ்நாடு அரசு கோர்ட்டில் தெரிவித்தது. இந்த கொலை நடந்து இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது.

இந்த சூழலில் ஆம்ஸ்ட்ராங் நினைவு பேரணி நடந்தது. இந்த பேரணியில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் என்ற புதிய கட்சியின் பெயரை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் கொடியையும் வெளியிட்டார்.

1 More update

Next Story