கை குட்டையால் நான் முகத்தை மறைத்தேனா? - எடப்பாடி... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 18-09-2025
x
Daily Thanthi 2025-09-18 06:17:11.0
t-max-icont-min-icon

கை குட்டையால் நான் முகத்தை மறைத்தேனா? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி என்னை விமர்சனம் செய்து வருகிறார். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது எப்படி எல்லாம் நடந்துகொண்டார்கள் என அனைவருக்கும் தெரியும். திமுக ஆட்சிக்கு வந்த போது யாரை விமர்சனம் செய்தார்களோ அவர்களுக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்ற காட்சியை ஊடகம், பத்திரிக்கை மக்கள் இடத்திலே காண்பித்து விட்டனர்.

பிறகு உள்துறை அமைச்சரை சந்திக்கும் போதும் நானும் கட்சி நிர்வாகிகளும் அரசாங்க காரில் தான் சென்று அவரை சந்தித்தோம். சந்தித்துவிட்டு அவர்கள் வெளியில் சென்று விட்டார்கள். நான் அவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வெளியேறினேன். அப்போது காரில் ஏறுவதற்கு முன் முகத்தை துடைக்கிறேன் அப்போது அதை வைத்து அரசியல் செய்வது வேதனையாகவும் உள்ளது.

பரபரப்பான செய்தி கிடைக்க வில்லை என்ற அடிப்படையில் இதை செய்தியாக வெளியிடுவது ஏற்புடையதா. முகத்தை துடைக்கிறேன் இதில் என்ன அரசியல் இருக்கிறது. என்று கேள்வி எழுப்பினார்.

1 More update

Next Story