மசோதா ஒப்புதல்: ஜனாதிபதி விளக்கம் கோரிய விவகாரம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025
x
Daily Thanthi 2025-08-19 10:11:30.0
t-max-icont-min-icon

மசோதா ஒப்புதல்: ஜனாதிபதி விளக்கம் கோரிய விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு நிர்ணயித்த தீர்ப்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விளக்கம் கோரிய விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பிலேயே, ஜனாதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு பதில் உள்ளது என தமிழ்நாடு அரசு சார்பில் அபிஷேக் சிங்வி வாதிட்டார்.

காவிரி, குஜராத் சட்டப்பேரவை வழக்குகளில் ஜனாதிபதி மூலம் எழுப்பிய கேள்விகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இந்த விளக்கம் கோரிய மனுவையும் திரும்ப அனுப்ப வேண்டும் என கேரளா சார்பில் வாதிடப்பட்டது. கவர்னருக்கு எதிராக தமிழ்நாடு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை நாங்கள் மறு ஆய்வு செய்யவில்லை. அதில் ஜனாதிபதி எழுப்பிய கேள்விகள் குறித்தே வாதங்களைக் கேட்கிறோம் என நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

1 More update

Next Story