திருப்பத்தூருக்கு 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-06-2025
x
Daily Thanthi 2025-06-26 06:27:39.0
t-max-icont-min-icon

திருப்பத்தூருக்கு 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 



திருப்பத்தூரில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

1. குமாரமங்கலத்தில் ரூ.6 கோடியில் துணை மின்நிலையம் அமைக்கப்படும்.

2. ஆம்பூர் பகுதியில் புதிய நூலக கட்டிடம் அமைக்கப்படும்.

3. 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் நல்ல குண்டா பகுதியில் ரூ.200 கோடி மதிப்பில் சிப்காட் அமைக்கப்படும்.

4. ஆலங்காயம் ஊராட்சி நெக்னாமலை பகுதியில் ரூ.30 கோடி மதிப்பில் 7 கிமீ-க்கு சாலை அமைக்கப்படும்.

5. திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் அமைந்துள்ள இடத்தில் ரூ.18 கோடி மதிப்பில் அடுக்குமாடி வணிக வளாகம் அமைக்கப்படும்

1 More update

Next Story