எஸ்.ஐ.ஆர். மூலம் தமிழகத்தில் வெற்றி பெற பா.ஜ.க.... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 02-11-2025
x
Daily Thanthi 2025-11-02 04:18:58.0
t-max-icont-min-icon

எஸ்.ஐ.ஆர். மூலம் தமிழகத்தில் வெற்றி பெற பா.ஜ.க. முயற்சி: உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு

பீகாரில் வருகிற 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருந்தன.

பீகாரை தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

1 More update

Next Story