தெலுங்கானா: அரசு பஸ் மீது லாரி மோதி 24 பேர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 03-11-2025
x
Daily Thanthi 2025-11-03 04:39:02.0
t-max-icont-min-icon

தெலுங்கானா: அரசு பஸ் மீது லாரி மோதி 24 பேர் பலி

தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் செவல்லா காவல் நிலையத்திற்கு உட்பட்ட கானாப்பூர் கேட் பகுதியில் இன்று காலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், 15-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில், பஸ் மீது டிப்பர் லாரி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில், பஸ்சில் இருந்த 24 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். பாரதீய ராஷ்டீரிய சமிதியின் தலைவரான தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தி உள்ளார்.

1 More update

Next Story