தெலுங்கானா: அரசு பஸ் மீது லாரி மோதல்; பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு

தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி விபத்துக்கு இரங்கல் தெரிவித்து உள்ளதுடன், சம்பவ பகுதிக்கு உடனடியாக செல்லும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
தெலுங்கானா: அரசு பஸ் மீது லாரி மோதல்; பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு
Published on

ஐதராபாத்,

தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் செவல்லா காவல் நிலையத்திற்கு உட்பட்ட கானாப்பூர் கேட் பகுதியில் இன்று காலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், 15-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில், பஸ் மீது டிப்பர் லாரி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில், பஸ்சில் இருந்த 17 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். பாரதீய ராஷ்டீரிய சமிதியின் தலைவரான தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தி உள்ளார்.

இதேபோன்று, முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியும் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து உள்ளதுடன், சம்பவ பகுதிக்கு உடனடியாக செல்லும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். தேவையான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தி உள்ளார். இந்நிலையில், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பலனின்றி பலர் உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வடைந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com