பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பிரதமர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 05-02-2025
x
Daily Thanthi 2025-02-05 06:58:39.0
t-max-icont-min-icon

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி பிரார்த்தனை 


உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நிகழ்வு, ஜன., 13ல் துவங்கியது. வரும் 26ம் தேதி வரை இந்த நிகழ்வு நடக்க உள்ள நிலையில், இதுவரை 32 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் மகா கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மகா கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜுக்கு பிரதமர் நநேர்ந்திர மோடி வந்தார். திரிவேணி சங்கமத்தில் அவர் புனித நீராடினார். முன்னதாக மோட்டார் படகில் கும்பமேளா நடக்கும் இடத்தில், அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உடன் பார்வையிட்டார்.

பின்னர் அவர் பிரயாக்ராஜில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டார். மேலும் ஆரத்தி காட்டி வழிபாடுகளையும் பிரதமர் மோடி மேற்கொண்டார். 

1 More update

Next Story