அரோகரா கோஷம் முழங்க கொடியேற்றம்.. பழனி தைப்பூசத்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 05-02-2025
x
Daily Thanthi 2025-02-05 07:46:00.0
t-max-icont-min-icon

அரோகரா கோஷம் முழங்க கொடியேற்றம்.. பழனி தைப்பூசத் திருவிழா தொடங்கியது

பழனி கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று காலை சிறப்பு பூஜையுடன் கொடியேற்றம் நடைபெற்றது. வேல், மயில், சேவல் உருவம் பொறித்த மஞ்சள் நிறக்கொடி ஆகியவை கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்தன.

அதன்பின்பு மங்கள வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் தைப்பூச திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் "வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா" என கோஷம் எழுப்பினர்.


1 More update

Next Story