பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் செய்த பணியை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-11-2025
x
Daily Thanthi 2025-11-08 06:59:32.0
t-max-icont-min-icon

பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் செய்த பணியை உதயநிதி செய்வதால் பெருமை - மு.க.ஸ்டாலின்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த திமுக 75 அறிவுத் திருவிழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ஏதோ கட்சியை தொடங்கினோம். அடுத்த முதல்-அமைச்சர் நான்தான் என்று அறிவித்து ஆட்சிக்கு வரவில்லை. வரலாறு தெரியாதவர்கள் திமுகவை மிரட்டுகிறார்கள். திமுகவை அழிக்க வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாது. திமுகவைப் போல வெற்றி பெறுவோம் என சிலர் பகல் கனவு காண்கிறார்கள். திமுகவைப் போல் வெற்றிபெற திமுகவை போன்ற அறிவும் உழைப்பும் தேவை.

உதயநிதியின் கொள்கை பிடிப்பான செயல்பாடுகளை பார்க்கிறபோது வள்ளுவர் சொல்வது போல, ‘மகன் தன் தந்தைக்கு ஆற்றும் உதவி' என்ற குறளை போல உதயநிதி சிறப்பாக செயல்படுகிறார். தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் செய்த பணியை உதயநிதி செய்வதால் பெருமை கொள்கிறேன்.

இவ்வாறு தெரிவித்தார். 

1 More update

Next Story