தீபாவளி பண்டிகை: தமிழகத்தில் 6,630 பட்டாசு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-10-2025
x
Daily Thanthi 2025-10-13 04:07:35.0
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகை: தமிழகத்தில் 6,630 பட்டாசு கடைகளுக்கு அனுமதி

தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.  தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு கடந்த 10-ந்தேதி வரையில் தீயணைப்புத் துறைக்கு 9 ஆயிரத்து 549 விண்ணப்பங்கள் வரப்பெற்றன.

இதில் நிரந்தர பட்டாசு கடைகள் வைப்பதற்கு 2 ஆயிரத்து 751 விண்ணப்பங்களும், தற்காலிக கடைகள் அமைக்க 6 ஆயிரத்து 702 விண்ணப்பங்களும் வந்துள்ளன.

போதிய பாதுகாப்பு வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை என 404 விண்ணப்பங்களை தீயணைப்புத் துறை நிராகரித்துள்ளது.

1 More update

Next Story