இருமல் மருந்து விவகாரம்: கைதான ரங்கநாதன் வீட்டில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-10-2025
x
Daily Thanthi 2025-10-13 06:06:18.0
t-max-icont-min-icon

இருமல் மருந்து விவகாரம்: கைதான ரங்கநாதன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

22 குழந்தைகளை உயிர் பலி வாங்கிய சம்பவம் தொடர்பாக மத்தியபிரதேச மாநில தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கொலையில்லாத மரண சம்பவத்தை விளைவித்தல், கலப்பட மருந்து தயாரித்தல் ஆகிய 2 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கில் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து துணை போலீஸ் சூப்பிரண்டு பாரசியா ஜிதேந்திர ஜாட் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெகோட்டின் மேஸ்ராம் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய தனிப்படை போலீசார் மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் (வயது 75), சென்னை கோடம்பாக்கம் நாகார்ஜூனாநகர் 2-வது தெருவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story