கேரள விமான நிலையத்திற்கு தாய்லாந்தில் இருந்து வந்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...14-05-2025
x
Daily Thanthi 2025-05-14 12:34:22.0
t-max-icont-min-icon

கேரள விமான நிலையத்திற்கு தாய்லாந்தில் இருந்து வந்த விமானத்தில் போதைப்பொருட்கள் கடத்தப்படுகின்றன என சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பயணிகளிடம் சோதனை செய்யப்பட்டது. அப்போது, சந்தேகத்திற்குரிய வகையில் வந்த 3 பெண்களிடம் சோதனை செய்ததில், 34 கிலோ உயர் ரக கஞ்சா, சாக்லேட்டுகளில் கலந்த 15 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.40 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, அந்த 3 பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் சுங்க துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

1 More update

Next Story