டெல்லியில் ஹோண்டுராஸ் நாட்டின் தூதரக திறப்பு விழா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...15-05-2025
x
Daily Thanthi 2025-05-15 11:22:31.0
t-max-icont-min-icon

டெல்லியில் ஹோண்டுராஸ் நாட்டின் தூதரக திறப்பு விழா இன்று நடந்தது. இதில், மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது, நமக்கு உற்ற துணையாக நின்ற நாடுகளில் ஹோண்டுராஸ் நாடும் ஒன்று என்றார்.

பாகிஸ்தானுடனான நம்முடைய உறவுகள் மற்றும் வர்த்தக உறவுகள் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், அது நிச்சயம் இருதரப்பு என்ற அளவிலேயே இருக்கும். பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை என்றால் அது, பயங்கரவாதம் ஒன்று மட்டுமே என பிரதமர் மிக தெளிவாக கூறி விட்டார் என்றும் கூறியுள்ளார்.

1 More update

Next Story