திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-11-2025
x
Daily Thanthi 2025-11-17 04:15:47.0
t-max-icont-min-icon

திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியீடு

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதம் வழிபட ஆன்லைனில் பல்வேறு தரிசன டிக்கெட்டுகள், தங்குமிட அறைகள் ஒதுக்கீடு வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி கோவிலில் உள்ள ஆர்ஜித சேவைகளான சுப்ர பாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை போன்ற டிக்கெட்டுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன.

ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 25-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான தங்கும் விடுதிகளில் அறைகள் ஒதுக்கீடு 25-ந்தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.

1 More update

Next Story