அரசியல் சாசனம் மீது நடந்த சிறப்பு விவாதத்தின்போது,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024
Daily Thanthi 2024-12-19 04:42:09.0
t-max-icont-min-icon

அரசியல் சாசனம் மீது நடந்த சிறப்பு விவாதத்தின்போது, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் மாநிலங்களவையில் பேசும்போது, அம்பேத்கர் பெயரை தொடர்ந்து கூறுவதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியை விமர்சித்தார். அதாவது, அம்பேத்கர், அம்பேத்கர்... என கூறுவது இப்போது 'பேஷன்' ஆகி விட்டது. கடவுளின் பெயரை இப்படி கூறியிருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்றார்.

அமித்ஷாவின் இந்த கருத்து எதிர்க்கட்சிகளுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அம்பேத்கரை அவர் இழிவுபடுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த நிலையில் அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதன்படி இன்று காலை 11.30 மணியளவில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அது தொடர்பான அக்கட்சியின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story