ராகுல் காந்தி மீது 3 பாஜக எம்.பி.க்கள் தாக்குதல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024
Daily Thanthi 2024-12-19 11:00:33.0
t-max-icont-min-icon

ராகுல் காந்தி மீது 3 பாஜக எம்.பி.க்கள் தாக்குதல் நடத்தியதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில், ராகுல் காந்தி மீதான அப்பட்டமான தாக்குதல் அவரது கண்ணியத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, நமது நாடாளுமன்றத்தின் ஜனநாயக உணர்வின் மீதான தாக்குதல். எங்களை நாடாளுமன்றத்திற்குள் நுழையவிடாமல் பாஜக எம்பிக்கள் தடுத்ததாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 More update

Next Story