மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம்:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-08-2025
x
Daily Thanthi 2025-08-23 04:47:10.0
t-max-icont-min-icon

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம்: தமிழக அரசுக்கு சித்தராமையா கோரிக்கை


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால், இப்போதே தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய தண்ணீர் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ளது. மேகதாதுவில் அணைகட்டுவதன் மூலமாக 177.25 டி.எம்.சி. தண்ணீர் கொடுக்க முடியாமல் போகுமா?.

அப்படி இருந்தும் மேகதாதுவில் அணைகட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அது எதற்கு என்று தெரியவில்லை. மேகதாதுவில் அணைகட்டுவதால் தமிழ்நாடு, கர்நாடகத்திற்கு பயன் உள்ளதாக இருக்கும். தமிழ்நாட்டுக்கு அதிக தண்ணீர் நிச்சயமாக செல்லும். அதனால் மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என தமிழ்நாட்டு அரசிடம் கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது என்று கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா கூறினார்.

1 More update

Next Story