கோவை பீளமேட்டில் இன்று காலை பா.ஜ.க.வின் கட்சி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-02-2025
Daily Thanthi 2025-02-26 10:21:23.0
t-max-icont-min-icon

கோவை பீளமேட்டில் இன்று காலை பா.ஜ.க.வின் கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டில் ஒரு எம்.பி. சீட் கூட குறையாது. விகிதாச்சார அடிப்படையிலேயே தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும் என்றார். தென்னிந்திய மக்களுக்கு கூடுதல் தொகுதிதான் கிடைக்கும். தொகுதி குறைய வாய்ப்பு இல்லை என கூறினார்.

இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த விவகாரம் பற்றி பேசுவதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுபற்றி பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மத்திய மந்திரி அமித்ஷா தெளிவாக தெரிவித்து விட்டார். அதனால், மார்ச் 5-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த என்ன தேவை உள்ளது? என கேள்வி எழுப்பி உள்ளார்.

1 More update

Next Story