
2வது நாள் கருத்தரங்கு கூட்டம்.. புறப்பட்டார் விஜய்
கோவையில் 2ம் நாளாக நடைபெறும் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் 8,000 பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாஸ் ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
தொண்டர்களை ஒழுங்குபடுத்தி உள்ளே பவுன்சர்கள் அனுமதித்து வருகின்றனர். தவெக தலைவர் விஜய் வரும்போது கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் பேரி கார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தவெக தலைவர் விஜய் கூட்ட நெரிசலில் சிக்காமல் நிகழ்ச்சி அரங்கிற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி விஜய் வரக்கூடிய சாலையில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் 2வது நாள் கருத்தரங்கு கூட்டத்திற்கு தவெக தலைவர் விஜய் புறப்பட்டார். விஜய்யின் பிரசார வாகனத்தை சூழ்ந்து கொண்டு தொண்டர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர். விஜய்-யின் வாகனத்திற்கு போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.






