
தமிழகத்தில் ரோடு ஷோ நடத்த அனுமதியில்லை - சென்னை ஐகோர்ட்டில் அரசு தகவல்
கரூர் கூட்ட நெரிசல், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோட் ஷோக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக வழிகாட்டு நெரிமுறைகள் வகுக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது. அப்போது, கட்சி கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் தங்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக தவெக தரப்பில் வாதிடப்பட்டது. சில கட்சிகளுக்கு 11 நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. சில கட்சிகளுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கப்படுவதில்லை என தவெக வாதிட்டது.
இதனை தொடர்ந்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான அனுமதி வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படவில்லை என்றார். மேலும், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என வாதிட்டார். வழக்கு விசாரணை ஐகோட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.






