கரூர் துயரம்: போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025
x
Daily Thanthi 2025-09-28 09:57:23.0
t-max-icont-min-icon

கரூர் துயரம்: போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளவை என்னென்ன..?

கரூரில் நேற்று நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கரூர் சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை தொடங்கியுள்ளது. இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

1 More update

Next Story