கரூரில் விஜய் பிரசாரம்: நெரிசல் ஏற்பட்ட இடத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025
x
Daily Thanthi 2025-09-28 15:00:44.0
t-max-icont-min-icon

கரூரில் விஜய் பிரசாரம்: நெரிசல் ஏற்பட்ட இடத்தில் தடயவியல் குழுவினர் ஆய்வு

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்த நிலையில், கரூரில் விஜய் பிரசாரம் செய்த வேலுச்சாமிபுரத்தில் கரூர் மாவட்ட தடயவியல் குழுவினர் ஆய்வு செய்தனர். நெரிசல் ஏற்பட்ட இடம், வாகனங்கள் வந்த இடங்களில் 3 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

1 More update

Next Story