ராமதாஸ் விதித்த கெடுவிற்கு நாளை பதிலளிக்கிறேன்:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 3-9-2025
x
Daily Thanthi 2025-09-03 13:50:13.0
t-max-icont-min-icon

ராமதாஸ் விதித்த கெடுவிற்கு நாளை பதிலளிக்கிறேன்: அன்புமணி

பாமக நிர்வாகக் குழு இன்று கூடியது. ராமதாஸ் தலைமையில் இன்று குழுவினர் கூடி ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து, அன்புமணி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்க வரும் 10 ஆம் தேதி வரை காலக்கெடு அளிப்பதாக ராமதாஸ் பேட்டி அளித்தார். முன்பு விதிக்கப்பட்ட காலக்கெடு கடந்த மாதம் 31ஆம் தேதியுடன் முடிந்த நிலையில், தற்போது மீண்டும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், ராமதாஸ் விதித்த கெடுவிற்கு நாளை பதிலளிக்கிறேன் என்று அன்புமணி தெரிவித்துள்ளர். சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அன்புமணி இந்த தகவலை தெரிவித்தார்.

1 More update

Next Story