திருச்செந்தூர் கோவிலில் சட்டவிரோதமாக தரிசன... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025
x
Daily Thanthi 2025-08-30 05:21:20.0
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவிலில் சட்டவிரோதமாக தரிசன டிக்கெட் விற்றால் கிரிமினல் நடவடிக்கை: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், அருள் முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, "கோவிலில் தனிநபர்கள் தரிசன டிக்கெட் விற்பனையில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக கோவிலை சுற்றி தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன” என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், "கோவிலுக்கு பக்தர்கள் வருவது நிம்மதியை தேடித்தான். அங்கும் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதை ஏற்க இயலாது" என்று அதிருப்தி தெரிவித்தனர். மேலும் "இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவை எதிர்மனுதாரராக சேர்க்கிறோம். அவர் கோவிலின் பாதுகாப்புக்கு தேவைப்படும் கூடுதல் போலீசாரை பணியில் அமர்த்த வேண்டும்.

சட்டவிரோத தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க அறநிலையத்துறையும், காவல்துறையும் இணைந்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்கள் அமைதியான முறையில் சாமி தரிசனம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்" என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

1 More update

Next Story