கொரோனா பரவலால் பெரிய அளவில் பாதிப்பில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


கொரோனா பரவலால் பெரிய அளவில் பாதிப்பில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
Daily Thanthi 2025-05-31 06:11:46.0
t-max-icont-min-icon

சென்னையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

வெவ்வேறு பெயர்களால் வரக்கூடிய கொரோனா பாதிப்புகளால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படுவதில்லை. இணை நோய் உள்ளவர்கள், வயதானவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிவது நல்லது.கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் இருந்ததன் காரணத்தால் 2023 மே 5ம் தேதி வரை நெருக்கடி நிலை இருந்தது.

தற்போது பரவும் கொரோனா வீரியமில்லாதது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி கைகளை கழுவுதல், தும்மல், இருமலின் போது முகத்தை மூடுவது போன்ற வழக்கமான நடைமுறைகளை கடைபிடித்தால் போதுமானது. பதற்றம் வேண்டாம்.தற்போது பரவும் 19 வைரஸ்களின் மாதிரிகளை புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்துகொள்ளலாம். இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். கொரோனா பாதிப்பால் உயிரிழந்த 60 வயது முதியவருக்கு நீரழிவு உள்ளிட்ட இணை நோய்கள் இருந்துள்ளன.பொது இடங்களில் முகக்கவசம் அணிவந்து நல்லதே தவிர கட்டாயம் இல்லை

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story