நாட்டில் தங்கத்தின் தேவை 16 சதவீதம் வீழ்ச்சி: உலக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 31-10-2025
x
Daily Thanthi 2025-10-31 03:37:54.0
t-max-icont-min-icon

நாட்டில் தங்கத்தின் தேவை 16 சதவீதம் வீழ்ச்சி: உலக தங்க கவுன்சில் தகவல்

இந்தியாவில் இந்த நிதியாண்டின் 2-ம் காலாண்டில் தங்கத்தின் தேவை 16 சதவீதம் குறைந்துள்ளது. தங்கம் விலை வரலாற்று உச்சத்தைத் தொட்டதால் நுகர்வோரின் வாங்கும் ஆர்வம் மந்தமானது. அதன் தரவுகளின்படி, 2-ம் காலாண்டில் தங்கத்தின் மொத்த தேவை கடந்தாண்டின் 248.3 டன்னிலிருந்து 209.4 டன்களுக்கு குறைந்தது. இது 16 சதவீதம் குறைவாகும்.

ஆனால், விலை அடிப்படையில் தேவையின் மதிப்பு 23 சதவீதம் உயர்ந்து ரூ.2,03,240 கோடியாக உயர்ந்தது (கடந்த ஆண்டு ரூ.1,65,380 கோடி) உலகின் 2-வது பெரிய தங்க நுகர்வோர் சந்தையாக உள்ள இந்தியாவில் தங்க நகை தேவை 31 சதவீதம் குறைந்து 171.6 டன்னிலிருந்து 117.7 டன்களாக வீழ்ந்தது.

1 More update

Next Story