13 விருதுகளை வென்ற கிரைம் திரில்லர் ''ருத்ரி''...எந்த ஓடிடியில் பார்க்கலாம்?


13 awards winnng movie rudri now available on amazon prime video
x
தினத்தந்தி 23 Aug 2025 7:08 PM IST (Updated: 23 Aug 2025 9:52 PM IST)
t-max-icont-min-icon

கிரைம் திரில்லர் படங்களைப் பார்க்க விரும்புவோருக்கு ''ருத்ரி'' ஒரு சிறந்த தேர்வாகும்.

சென்னை,

கன்னடத்தில் பதிகெரே தேவுந்த்ரா இயக்கிய இந்தப் படம், சஸ்பென்ஸ் நிறைந்தது. திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், தற்போது ஓடிடியில் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

தாகூர் சர்வதேச திரைப்பட விழாவில் 13 விருதுகளை இப்படம் வென்றுள்ளது. படத்தில் வட கர்நாடகாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் ஒரு பெண் தனது பாட்டியுடன் வசிக்கிறாள்.

டீ கடையில் வேலை செய்யும் அந்த பெண்ணை 4 பேர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். இந்த சம்பவம் அவரை பெரிதும் பாதிக்கிறது. அவமானங்களை சந்திக்கிறார். இதனால், தன் வாழ்க்கையை சீரழித்த நான்கு பேரையும் பழிவாங்க ஒரு திட்டத்தை வகுக்கிறார்.

இப்படிப் போகும் இந்தப் படத்தில்...கிளைமாக்ஸில் வரும் திருப்பத்தை யாராலும் நினைத்துப் பார்க்க முடியாது. அந்த திருப்பம் என்ன? அந்தப் பெண் தீயவர்களை பழிவாங்கினாரா? இல்லையா? என்பது கதை.

தற்போது, ​​இந்தப் படம் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்டிரீமிங் ஆகிறது. கிரைம் திரில்லர் படங்களைப் பார்க்க விரும்புவோருக்கு ருத்ரி ஒரு சிறந்த தேர்வாகும்.

1 More update

Next Story