காதலர் தினத்தில் வெளியாகும் '2கே லவ் ஸ்டோரி' படம்

சுசீந்திரன் இயக்கியுள்ள '2கே லவ் ஸ்டோரி' படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
காதலர் தினத்தில் வெளியாகும் '2கே லவ் ஸ்டோரி' படம்
Published on

சென்னை,

'வெண்ணிலா கபடிக்குழு' படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான சுசீந்திரன் "நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா, ஈஸ்வரன்" உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படமாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் '2கே லவ் ஸ்டோரி'. இன்றைய இளம் தலைமுறையின் காதல், நட்பு என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் படைப்பாக இந்த படம் உருவாகியுள்ளது.

சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். மேலும் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

திருமணத்திற்கு புகைப்படம் எடுக்கும் இளைஞர்கள் குழுவின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வகையில் இந்த படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. இந்த படத்துக்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி வைரலாகின.

இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 10-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் காதலர் தினமான வருகிற பிப்ரவரி மாதம் 14-ந் தேதி வெளியாக உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com