துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் 3 கதாநாயகிகள்!

'கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் துருவ் நடிக்க உள்ளார்.
துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் 3 கதாநாயகிகள்!
Published on

சென்னை,

பாலிவுட் இயக்குனர் நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் 'கில்'. கரண் ஜோகர் தயாரித்த இந்த படத்தில் லக்ஷயா, ராகவ் ஜுயல், தன்யா, ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இப்படத்தின் தென்னிந்திய மொழி ரீமேக் உரிமையை இயக்குனர் ரமேஷ் வர்மா கைப்பற்றியுள்ளார். 'கில்' படத்தின் ' தமிழ் ரீமேக்கில் நடிக்க துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது.வில்லன் கதாபாத்திரத்தில் உறியடி விஜயகுமார் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க 3 கதாநாயகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது, கயாடு லோகர், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கேதிகா சர்மா என மூன்று கதாநாயகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கில் படத்தில் ஒரு கதாநாயகி தான் ஆனால், இதன் ரீமேக்கில் மூன்று கதாநாயகிகள் நடிக்கவுள்ளதால் கதையில் மாற்றம் செய்திருப்பார்கள் என தெரிகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com