33 ஆண்டுகளை நிறைவு செய்த “தேவர் மகன்” திரைப்படம்

பரதன் இயக்கத்தில் கமல், சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ‘தேவர் மகன்’ திரைப்படம் 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது..
33 ஆண்டுகளை நிறைவு செய்த “தேவர் மகன்” திரைப்படம்
Published on

சிவாஜி கணேசன், கமல்ஹாசன் நடித்த தேவர் மகன் படம் 1992-ல் திரைக்கு வந்தது. நாசர், ரேவதி, கவுதமி ஆகியோரும் நடித்து இருந்தனர். பரதன் இயக்கத்தில் கமலின் திரைக்கதையில் வெளியான இந்த படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமலின் அப்பாவாகவும், பெரிய தேவராகவும் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் வில்லனாக நாசர் நடிக்க கவுதமி, ரேவதி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். 

இளையராஜாவின் இசையில் போற்றி பாடடிப் பெண்ணே, இஞ்சி இடுப்பழகி பாடல்கள் ரசிகர்களை ரசிக்க வைத்தது. அதற்கு முன் காமெடி வேடங்களில் நடித்திருந்த வடிவேலுக்கு இந்த படத்தில் குணச்சித்திர வேடம். அவருக்கு சில காட்சிகளே என்றாலும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி நடிகர் திலகத்தின் பாராட்டை பெற்றார். இந்த படத்தில் கமல், சிவாஜி கணேசன், நாசர் ஆகிய மூவரும் நடிப்பும் மிகவும் சிறப்பாக இருந்தது. 

இந்தப் படம் 1992 அக்டோபர் 25ம் தேதி வெளியானது. இன்றோடு இப்படம் வெளியாகி 33 வருடங்கள் ஆகிவிட்டது.

என் குழந்தைக்கு 33 வயதாகிறது.. இப்போது வரை அதை உயிரோடும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்கு நன்றி என கமல் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com