டோலிவுட்டில் 'ஏ' சான்றிதழ் அலை: பட்டியலில் இணைந்த மேலும் ஒரு படம்

இந்த ஆண்டு, ஓஜி, ஹிட் 3, தம்முடு, பைரவம் மற்றும் கிஷ்கிந்தாபுரி போன்ற படங்களுக்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது.
சென்னை,
சமீப காலமாக, தெலுங்கு படங்களுக்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் 'ஏ' தர மதிப்பீடு அளித்து வருகிறது. இந்த ஆண்டு, ஓஜி, ஹிட் 3, தம்முடு, பைரவம் மற்றும் கிஷ்கிந்தாபுரி போன்ற படங்களுக்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது.
இப்போது, இந்தப் பட்டியலில் இன்னொரு தெலுங்குப் படமும் இணைந்துள்ளது. சுதீர் பாபுவின் திகில் திரில்லர் படம் ஜடதாராவுக்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஜடதாரா படம் வருகிற 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
வெங்கட் கல்யாண் இயக்கி உள்ள இப்படத்தின் மூலம் சோனாக்சி சின்கா தெலுங்கில் அறிமுகமாகிறார். ஷில்பா ஷிரோத்கர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.இந்த படத்தை உமேஷ் குமார் பன்சால், ஷிவின் நரங், அருணா அகர்வால், பிரேர்ணா அரோரா, ஷில்பா சிங்கால் மற்றும் நிகில் நந்தா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
Related Tags :
Next Story






