“பராசக்தி” படத்தின் ஆடியோ உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்


“பராசக்தி” படத்தின் ஆடியோ உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்
x
தினத்தந்தி 14 Oct 2025 8:23 PM IST (Updated: 3 Nov 2025 1:43 PM IST)
t-max-icont-min-icon

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் வரும் ஜனவரி 14-ம் தேதி வெளியாக இருக்கிறது.

சென்னை,

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்துள்ளார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்திருக்கிறார். இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கிறார்.இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, மதுரை, இலங்கை, பொள்ளாச்சியைத் தொடர்ந்து இறுதியாக சென்னையில் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையில் ‘ஜனநாயகன்’ படத்துடன் ‘பராசக்தி’ மோத உள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில், ‘பராசக்தி’ படத்தின் ஆடியோ உரிமையை சரிகம சவுத் நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story