அஜித்தின் 'ஏகே 64' படத்தில் இணையும் பிரபல நடிகை.. யார் தெரியுமா?


அஜித்தின் ஏகே 64 படத்தில் இணையும் பிரபல நடிகை.. யார் தெரியுமா?
x
தினத்தந்தி 15 Dec 2025 9:10 AM IST (Updated: 15 Dec 2025 12:14 PM IST)
t-max-icont-min-icon

ஏகே 64 திரைப்படத்தில் நடிக்கப்போகும் நடிகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இப்படம் அஜித்குமார் ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட்டாக அமைந்தது. இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், பிரபு, பிரசன்னா, திரிஷா என பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அஜித்குமாரின் புதிய படத்தை ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார். இது அஜித்குமாரின் 64-வது படமாகும். இந்த படத்திற்கு தற்காலிகமாக "ஏகே 64" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

இந்த நிலையில், "ஏகே 64" திரைப்படத்தில் நடிக்கப்போகும் நடிகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தில் முன்னணி நடிகையான ரெஜினா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே அஜித்துடன் 'விடாமுயற்சி' படத்தில் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story