“ஆண்பாவம் பொல்லாதது” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


“ஆண்பாவம் பொல்லாதது” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Sept 2025 2:31 PM IST (Updated: 24 Sept 2025 8:45 AM IST)
t-max-icont-min-icon

கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் நடித்துள்ள ‘ஆண்பாவம் பொல்லாதது’ படம் அக்டோபர் 31ம் தேதி வெளியாகிறது.

சென்னை,

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரியோ ராஜ், கடந்த 2019-ல் வெளியான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்திலும் ஹீரோவாக நடித்து கவனம் பெற்றார். மேலும், "ஜோ, ஸ்வீட் ஹார்ட்" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த ''ஜோ'' திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து ''ஜோ'' பட ஜோடி மீண்டும் ஒன்றாக இணைந்து நடிக்கும் படம் ‘ஆண்பாவம் பொல்லாதது’. இப்படத்தை கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் சமுதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக உருவாகியுள்ளது.. 'ஜோடி பொருத்தம்' என்ற முதல் பாடலை விக்னேஷ் ராமகிருஷ்ணா வரிகளில் லட்சுமிகாந்த் பாடியுள்ளார்.

இந்நிலையில், ‘ஆண்பாவம் பொல்லாதது’ படம் அக்டோபர் 31ம் தேதி வெளியாகிறது என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

1 More update

Next Story