ரவிமோகன் பற்றி ஆர்த்தியின் வலைதள பதிவு வைரல்

ரவிமோகன் மற்றும் கெனிஷாவைத்தான் இவர் மறைமுகமாக விமர்சித்திருப்பதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ரவிமோகன் பற்றி ஆர்த்தியின் வலைதள பதிவு வைரல்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர், ரவிமோகன். இவர் மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகிறார். அதோடு மனைவியிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.

இந்த நிலையில் ஆர்த்தியைப் பிரிந்த ரவிமோகன், பாடகி கெனிஷாவுடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ரவிமோகன், ஆர்த்தி இருவரும் ஒருவர் மீது ஒருவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.

வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், இரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் தாக்கி கருத்து தெரிவிக்கக்கூடாது' என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால் ரவிமோகன், ஆர்த்தி இருவரும் அமைதியாக இருந்தனர்.

இந்த நிலையில் ஆர்த்தி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ஒரு பதிவு, வைரலாகி உள்ளது. அந்தப் பதிவில், ஒரு தெரபிஸ்ட் சொன்னது: பன்றியுடன் சண்டையிடாதே... நீயும், பன்றியும் சேற்றில் சிக்கிவிடுவீர்கள். ஆனால் அந்த சேற்றை ரசிப்பது என்னமோ பன்றிதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவில் அவர் மறைமுகமாக விமர்சிப்பது, ரவிமோகன் மற்றும் கெனிஷாவைத்தான் என்று பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com